நினைவில் நிற்கும் வரிகள்:
***
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
கேளு மாயனாராம் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா
நீயும் பொய்யா நானும் பொய்யா
நினைத்துப் பார்த்து சொல்லடா
உன் வாயும் பொய்யா வயிறும் பொய்யா
வாதம் ஒழுங்கா செய்யடா
சரக்கு இருந்தா அவிழ்த்து விடு
இல்லே சலாம் போட்டு ஓடிவிடு
வாயும் பொய்தான் வயிறும் பொய்தான்
யாவும் பொய்யே தானடா
மாய உலகில் மயங்கும் மனிதா
வம்பு வாதம் ஏனடா
வாயும் வயிறும் பொய் என்றாலே
காயும் கனியும் எதற்கடா
சாயம் வெளுத்து போகும் முன்னே
ஜல்தி ஆன்சர் பண்ணடா
காயும் கனியும் உடலை வளர்க்க
கடவுள் படைத்த பொருளடா எங்கப்பா
காளை போல பாய வேண்டாம்
நீயும் சும்மா நில்லடா
ஆளைப் பார்த்து காளை என்று
அழைக்கும் இடியட் கேளடா
மூளை இல்லா நீயும் இதை உன்
முதுகில் வாங்கிக் கொள்ளடா
நீயும் பொய்தான் நானும் பொய்தான்
உனது வார்த்தை மெய்யடா
இந்தக் காயம் பொய்தான் அடிக்கும் எனது
கையும் கூட பொய்யடா
– 1961 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘குமுதம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மருதகாசி.