பெண் குழந்தைகளைப் போற்றுவோம்!

2008-ம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ, பெண் குழந்தைகளைக் காப்பது, இலவச/ மானியக் கல்வி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.

ஆண்டுதோறும், ஒரு புதிய கருப்பொருளின் அடிப்படையில், பெண் குழந்தைகளுக்கான தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் அறிவிக்கப்படவில்லை.

2019-ம் ஆண்டில், ‘ஒளிமயமான நாளைக்காக பெண்களை மேம்படுத்துதல்’ என்றும், 2020-ல் ‘எனது குரல், எங்கள் பொதுவான எதிர்காலம்’ என்றும், 2021-ல், ‘டிஜிட்டல் தலைமுறை, எங்கள் தலைமுறை’ என்பதும் தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளாக இருந்தது.

ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதை குடும்பமும், சமூகமும் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.

பெண்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். பெண் என்பவள், சுமையோ அல்லது கணவன் வீட்டிற்கான பெண் என்ற மனோபாவத்தை மாற்றவும்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இடையில் வேறுபாடு பார்க்காமல் சமத்துவத்தை மேம்படுத்தவும்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் மற்றும் நாட்டின் முன்மாதிரி பெண்களின் பெயர்களில் சாலைகள் மற்றும் சதுக்கங்களில், கிலோமீட்டர் நீளமுள்ள ரங்கோலி அலங்காரங்கள் 50 இடங்களில் செய்யப்படும்.

பெண் குழந்தைகளுக்கான இந்த நாளில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி மற்றும் மாநில அமைச்சர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் ஆகியோர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்கின்றனர்.

– நன்றி: ஜீ நியூஸ் தமிழ்

You might also like