ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க அறிவித்துள்ளது.
தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, நாசர், சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், சாமிநாதன், தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.