இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக ’அயலி’ என்ற தொடரினை அறிவித்துள்ளது.
விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளைக் கொடுத்த ZEE5, தற்போது ‘அயலி’யைத் தொடங்குகிறது. இயக்குநர் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இது எட்டு பகுதிகளாக வெளியாக உள்ளது.
இதில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மாதவன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான் அயலி.
அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது.
இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.
பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள்.
இளைஞர்களின் மனக்கசப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரமான விருப்பத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதிய வயதுக் கதைதான் அயலி.
பழங்கால பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் உடைத்து, தனது தேடலை அடைய போராடும் தமிழ்ச் செல்வியின் பயணத்தை இந்த கதை கூறுகிறது.
பேப்பர் ராக்கெட்டின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, இந்த தொடரை பார்வையாளர்களுக்கு பெருமையுடன் அறிவித்தார்.
ZEE5, இந்திய தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா, “சமூகச் செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் எப்பொழுதும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும், கல்வியறிவு அளிக்கும், அறிவூட்டும், மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை ZEE5 இல் உள்ள அனைவரும் நம்புகிறோம். அயலி அப்படிபட்ட கதைதான்”
இயக்குனர் முத்துக்குமார், “அயலி தொடர் பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் கனவுகளை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வலிமையை கூறும் ஒரு கதையாக இருக்கும்” என்று உற்சாகமாகக் குறிப்பிட்டார்.