இளையராஜா இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’!

இளையராஜா இசையில் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், கதை திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கிவருகிறார்.

பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு படத்தின் மோஷன் போஸ்டரை, இளம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த இயக்குநரும், தனது மாறுபட்ட நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவருமான கௌதம் வாசுதேவன் மேனன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“இந்த படத்திற்காக அசத்தலான ஐந்து பாடல்களை உருவாக்கி தந்திருக்கிறார் இசைஞானி.

அதில் “இதயமே …இதயமே…” என்று தொடங்கும் பாடலை இளையராஜா எழுத “யங் மேஸ்ட்ரோ’ யுவன்சங்கர்ராஜா பாடியிருக்கிறார்.

பழநிபாரதி, சினேகன் எழுதியிருக்கும் மற்ற பாடல்களும் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமரும்.

மனசுக்குள் தோன்றிய முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக்காது என்ற கருத்தை மையமாக வைத்து இளமை துள்ள இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

பள்ளி பருவத்து காதலை கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், காதல், 96 படங்களின் வரிசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ படமும் நீங்கா இடம்பிடிப்பது உறுதி” என்று தெரிவித்தார் இயக்குனர் ஆதிராஜன்.

You might also like