பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, கேரள மாநிலம் சித்தூர் எனும் மிகச் சிறிய டவுனில் உள்ள திரை அரங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தனியார் திரை அரங்கம் அல்ல. கேரள அரசு நடத்தும் திரை அரங்கம் ஆகும். ஆனால் தனியார் திரை அரங்கத்திற்கு சமமாக அதி நவீன ஒலி / ஒளி அமைப்புடன் அமையப் பெற்றதாகும்.
இந்த ஊரில் மட்டுமல்ல… கேரளாவின் நிறைய நகரங்களில் இந்த மாதிரி கேரள அரசின் திரை அரங்கங்கள் உள்ளன.
எந்த நடிகரின் படம் வந்தாலும் (தற்போது வெளிவந்த வாரிசு, துணிவு உட்பட) டிக்கெட் விலை ரூ.105/ மட்டுமே.
கார் / பைக் எதுவாகினும் பார்க்கிங் கட்டணம் ரூ 10/ மட்டுமே. மேலே பதிவிட்டுள்ள திரை அரங்கங்கள் இரண்டு திரைகளைக் கொண்டதாகும்.
தற்போது இரண்டிலுமே வாரிசு மற்றும் துணிவு படங்கள் திரையிடப்பட்டுள்ளன.