உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா!

ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது.

இன்று முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

இது உலகின் மிக பெரிய விளையாட்டுத்திடலாகும். இந்நிலையில், ஒடிசாவின் கட்டாக் நகரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில் அம்மா நில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்பட பலர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான நடனங்கள் மற்றும் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரபல திரை நட்சத்திரங்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சியும் நடந்தது. வண்ணமயமான இந்தத் தொடக்க விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

You might also like