பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் எண்ணம் மாற வேண்டும்!

நடிகை பார்வதி கண்டனம்

சார்பட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்களின் எழுத்தாளர் தமிழ்ப் பிரபா எழுதிய “கோசலை” என்ற நாவலின் வெளியீட்டு விழா சென்னை, அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகை பார்வதி, பாடகர் அறிவு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை பார்வதி, தங்கலான் திரைப்படத்தில் நான் நடிக்க வரும்போது தமிழ்ப் பிரபா அவர்கள் எனக்கு அறிமுகம், அந்த படத்தில் நடிக்கும் என் கதாபாத்திரத்திற்கு நான் மட்டுமே தகுதியானவர் என்றும் சொன்னார். ஒரு எழுத்தாளர் அப்படி சொல்வது அரிது.

எனக்கு தமிழ் படிக்க தெரியாது, அதனால் நான் இன்னும் இந்த புத்தகத்தை படிக்கவில்லை. கண்டிப்பாக நான் படிக்கும் முதல் தமிழ் புத்தகம் கோசலை புத்தகமாக தான் இருக்கும்.

சமூகத்தில் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள், பெண்களை தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதற்காக இந்த கோசலை என்ற கதாபாத்திரம் போன்று நிஜ வாழ்க்கையில் வந்தால் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

இயக்குனர் பா ரஞ்சித் பேசியபோது, நீலம் நிறுவனம் ஆரம்பித்ததற்கு காரணம் அம்பேத்கரிடம் நான் கொண்ட புரிதலை மற்றவர்களுக்கு சொல்வதற்காக தான் நான் சினிமாவிற்கு வந்தேன்.

இந்த நாவலை படிக்க ஆரம்பித்தபோது எனக்கு நல்லா தூக்கம் வந்தது. திரைப்படங்களை காட்டிலும் எழுத்துக்கள் மட்டுமே என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.

நான் சிறுவயதில் கடைக்கு பந்து வாங்க சென்ற போது கடைக்காரரால் ஜாதியின் ரீதியாக பாதிக்கப்பட்டேன்.

உணர்வுகளை வெளிப்படுத்த எழுத்துக்கள் மட்டுமே உதவும், எனக்குள் உண்டான அழுத்தமே என் திரைப்படங்கள்.

தலித் மக்களை சினிமாவில் காட்டுவதற்கு கூட மாற்று எண்ணத்தை உருவாக்கி விட்டோம். அவர்கள் சட்டை அணிய வேண்டுமா, காலணி போட வேண்டுமா என்பதைப்போல. நாம் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டிய தேவை உள்ளது அதை ஏற்கனவே நம் உருவாக்கி உள்ளோம்.

 பாடகர் அறிவு பேசியபோது, என்னை சுற்றி வெறும் புத்தகங்கள் மட்டுமே இருக்கும், சிந்தனையாளன், கம்யூனிசம் பேசும் போன்ற புத்தகங்கள் இருக்கும்.

நான் படித்த ஒரு புத்தகத்தில் பெண்ணை நாயுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பார்கள். அதனால் நான் வாசிப்பதை நிறுத்த தொடங்கிவிட்டேன்.

ஒரு திரைப்படம் வெளியே வந்து நம் கஷ்டங்களை வெளிக்கொண்டு வரும். நம் கதையை பேசும் ஒரு படம் வெளியே வருகிறது என்று நான் முதல் முதலில் பார்த்தது பா.ரஞ்சித் அவர்களின் திரைப்படம் தான்.

என் சிந்தனையை போன்று உள்ளது என்று பா ரஞ்சித் அவர்களின் சிந்தனையால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் நான். ஒரு சரியான புத்தகம் நமக்கு தருகின்ற அறிமுகம் ஒருநாளும் பொய்யாக போகாது.

இந்த நாவல் மூலம் நான் யார் என்று உணர்ந்து என்னை நெருக்கப்படுத்திக் கொண்டேன். புத்தகத்திற்கும், புத்தத்திற்கும் எதோ சம்மந்தம் உள்ளது என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருக்கிறது.

சாதி என்கிற அமைப்பு நம்மை இந்த பொறியில் சிக்க வைத்து வேறு எதுவும் யோசிக்க விடாமல் நம்மை இதுக்குள்ளாகவே சுத்த வைக்கிறது. விழிப்புணர்வை அடைந்தவது தான் விடுதலைக்கான ஒரே வழி.

பிரிவினை என்பது அல்ல அன்பு மட்டுமே ஒன்று என இருப்பது தான் என் எண்ணம். எல்லா உயிர்களையும் சமம் என்ற நினைக்கும் எங்கள் பாட்டி போதும், நான் ரஞ்சித்திடம் சேர்ந்த பிறகு என்னைப்போல் நிறைய பேர் இன்று பாட்டு எழுதுகிறார்கள்.

ஒரு கரு எப்படி வெளிவர தவிக்குமோ அப்படி தான் நானும் தவிக்கிறேன், அந்த கருவில் இருந்து சமத்துவம் வெளியே வர வேண்டும் என்பதே என் எண்ணம்.

You might also like