பூமியை நோக்கி வரும் செயலற்ற செயற்கைக்கோள்!

பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வுச் செய்யக் கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் இன்று பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது.

புவிவட்டப் பாதைக்குள் செயற்கைக் கோள் வரும்போதே, அது எரிந்துவிடும் என்றும் ஆனால், ஒரு சில பாகங்கள் மட்டும் எரியாமல் பூமிக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நாசா கூறுகிறது.

இன்று இரவு இந்த செயற்கைக் கோள் பூமியில் விழலாம் என்றும், முழுதாக 17 மணி நேரம் அது பயணித்து பூமியை அடையும் என்றும் கூறப்படுகிறது.

You might also like