புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலச் சாதனைகள்!

– நூலாக்கியிருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி இன்றைக்கு அதிலும் தேர்தல் நெருங்கிய நிலையில் பலர் பேசுகிறார்கள்.

அவருடைய ஆட்சியைப் பற்றித் தெரியாத நிலையிலும் சிலர் பேசி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த பத்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன சாதனைகள் நடந்தன என்பதைத் தொகுத்துக் காலப் பொருத்தமாக கொண்டு வந்திருக்கிறார் வணக்கத்திற்குரிய முன்னாள் மேயரான சைதை துரைசாமி.

ஏற்கனவே கேரளாவில் எம்.ஜி.ஆரை நினைவூட்டும் வடவனூரில் அவருக்கான நினைவில்லத்தைக் கட்டி முடித்துப் பெருமை சேர்த்திருக்கிற சைதை துரைசாமி, தற்போது எம்.ஜி.ஆர் ஆட்சியின் சாதனைகளை விரிவாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.

மற்றவர்கள் செய்யத் தவறிய பணியைச் செய்திருக்கிற சைதை துரைசாமியின் தொகுப்பில் வெளியாகி இருக்கிற இந்த நூலைப் படித்துப் பார்ப்பவர்கள் யாரும் நாளைக்கு அவர் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்கிற கேள்வியைக் கேட்க முடியாது.

துவக்கப் பள்ளி, பொறியியல் கல்வி, சத்துணவு, மகளிர் நலன், தமிழ்மொழி மேம்பாடு, நீர்ப்பாசனத்திற்கான அண்டை மாநிலங்களுடனான ஒப்பந்தம், ஈழத்தமிழர் நலன் என்று புரட்சித் தலைவர் தன் ஆட்சிக் காலத்தில் அத்தனை மகத்தான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

அவை அனைத்துக்குமான வரலாற்றுச் சான்றாக, அரிய ஆவணமாகத் திகழ்கிற நூலை, எம்.ஜி.ஆரைப் போற்றும், அவரை விரும்பும் ஒவ்வொருவரும் வரவேற்பார்கள்.

இதோ சிறப்புக்குரிய அந்த நூல் உங்கள் பார்வைக்கு:
https://www.thaaii.com/…/upl…/2020/12/MGR-BOOK-FINAL.pdf

You might also like