ரஷ்யாவின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்!

இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை.

தற்போது முதன்முறையாக அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்ய பகுதியாக ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியாக நேற்று மதியம் முதல் இன்று இரவு வரை 36 மணி நேரம் போரை நிறுத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம். உக்ரைனில் ரஷ்யா பிடித்துள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும்.

அதோடு, ரஷ்யாவின் இந்த போர் முடிவு பிரகடனம் ஒரு அரசியல் தந்திரம். ஆயுதங்களை குவிக்கவே ரஷ்யா போர் நிறுத்த நாடகம் செய்கிறது” என குற்றம்சாட்டினார்.

You might also like