3வது டி-20 போட்டி தொடரை வெல்லப் போவது யார்?

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like