க.நா.சு.வின் தொகுக்கப்படாத படைப்புகள்!

சென்னை புத்தகக் காட்சிக்கான நூல் அறிமுகம்

க.நா.சுப்ரமணியத்தின் நினைவு நாளன்று “அழிசி” மூலமாக தான் தொகுத்து வெளிவரவுள்ள அவரின் தொகுக்கப்படாத படைப்புகள் – “எமன்” பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார் விக்ரம் சிவகுமார்.

மிகவும் சவாலான தொகுப்பு பணி. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தயாரிக்க ஆரம்பித்த இத்தொகுப்பு விரிவடைந்து இரு பாகங்களாக ஒரு முழுமையான தொகுப்பாக வெளிவரவுள்ளது.

இத்தொகுப்பின் மூலம் புதிய படைப்பாளிகளுக்கும், புதிய தலைமுறை இளம் வாசகர்களுக்கும் க.நா.சுவும் அவரது தனி மனித இலக்கிய இயக்கத்தின் பிரமாண்டத்தையும் கொண்டுசெல்வதே நோக்கம்.

இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் க.நா.சு முன்வைத்த வாழ்க்கை மீதான அவதானிப்புகளும், இலக்கியத்தில் அவர் காட்டிய தீவிர தன்மையும் மாறிவரும் இக்காலகட்ட நவீன இலக்கிய வெளியில் ஏன் அவசியமாகிறது என்பதை இந்நூல் கண்டிப்பாகக் கூறும். இவ்வருட புத்தகக் கண்காட்சியில் வெளிவரும்.

இத்தொகுப்பு உருவாக காரணகர்த்தாக்கள் – கவிஞர் ராணிதிலக், பதிப்பாளர், நண்பர் மற்றும் இணை தொகுப்பாசிரியராகவே உதவி செய்த “அழிசி” ஸ்ரீநிவாசனுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

You might also like