– நடிகை ஸ்ருதி ஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இப்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா படத்திலும் சுருதிஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன.
இது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாக மாறி உள்ளது. பட வாய்ப்பு இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணமா அல்லது அதிக சம்பளம் கிடைப்பதால் நடிக்கிறாரா என்று சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தன்மீது வைக்கும் எல்லா கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்கு நேரடியாகவே பதில் அளிப்பது சுருதிஹாசனின் வழக்கம். இதற்கு முன்னரும் திருமணம் தொடர்பான கேள்விக்கும் மிக வெளிப்படையாக பதில் அளிச்சிருந்தார்.
அந்த வகையில் சுருதிஹாசனிடம் வயதான நடிகர்களுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சுருதிஹாசன், “நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம்.
இதை ஏற்கனவே பல வயதான ஹீரோக்கள் தங்களை விட இரண்டுமடங்கு வயது குறைவான இளம் கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல” அப்படீன்னு சொல்லிபுட்டார்.