தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்’.
தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் ‘அசோக்குமார்’.
முதல் படமான ‘சதிலீலாவதி’யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
நாடகமாக நடத்தப்பட்டு முதன்முதலில் படமாக்கப்பட்ட கதை எம்.ஜி.ஆர் நடித்த ‘என் தங்கை’.
முதன் முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பரிசுபெற்ற தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்’.
முதன்முதலாக ஆறு மொழிகளில் தயாரான தமிழ்ப்படம் எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்’.
முதன்முதல் முழு நீளக் கலரில் தயாரான தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கத் தகுந்தது என்று ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’.
முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’.
முதன்முதலாக சென்னையில் ஒரே சமயத்தில் 6 தியேட்டர்களில் வெளிவந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மகாதேவி’
முதன்முதல் ஒரு நடிகர் சொந்தத்தில் படம் தயாரித்து, இயக்கி, சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய தமிழ்ப் படம்
எம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’.
‘ஹரிதாசு’க்குப் பின் தமிழகத்தில் அதிக நாட்கள் (236 நாட்கள்) ஓடிய ‘எங்க வீட்டுப் பிள்ளை’ சென்னையில் முதன்முதலாக மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.
தமிழ்ப் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த படங்களே. (நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை)
தமிழ்ப் படங்களில் 100 நாட்கள் ஓடியது எம்.ஜி.ஆர். படங்களே அதிகம். நூறு நாட்கள் ஓடிய படங்கள் 49.
இலங்கையில் அதிகமாக அதிகப் படங்கள் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆரின் படங்களே.
சென்னையைத் தவிர தமிழகத்தின் வேறு நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிரம்பி சாதனை செய்தவை எம்.ஜி.ஆரின் படங்களே! (4 படங்கள்)
முதன்முதல் ஆங்கிலப் படம் திரையிடப்படும் ‘சபையர்’ தியேட்டரில் வெளிவந்து அதிக வசூலைத் தந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கன்னித்தாய்’.
நாடோடி மன்னன், மதுரை வீரன் சாதனையை முறியடித்தது. 1965-ல் திரையிடப்பட்ட எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னனின் சாதனையை முறியடித்தது.
1956 முதல் 12 ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாமல் தென்னக ரீதியில் வசூல் பேரரசராக விளங்கும் ஒரே நடிகர் சாதனைத் திலகம் எம்.ஜி.ஆரே.
முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களிலும் நல்ல வசூலாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
விஞ்ஞான ரீதியில் முயன்று உண்மையிலேயே பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கலையரசி’.
இந்தியாவிலேயே குறைந்த நாட்களில் (13 நாட்களில்) தயாரிக்கப்பட்ட படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘முகராசி’. அதிகப் படங்களில் அதாவது (ஆறு) படங்களில் இரட்டை வேடம் தாங்கி கதாநாயகனாக நடித்த நடிகர் அகில உலகிலேயே எம்.ஜி.ஆர்.தான்.
மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிக்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆரே.
முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் “பாதுகாப்பு நிதிக்குப் பணம் தாரீர்” என்று வானொலியில் கூறியபோது முதன்முதலாக அதிக தொகை (75 ஆயிரம்) கொடுத்த நடிகர் எம்.ஜி.ஆர். தான்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் தரப்பட இருந்த ‘பத்மஸ்ரீ’ விருது தமிழை அடிமைப்படுத்த முயலும் இந்தியில் இருப்பதால் ஏற்க மறுத்த முதல் கலைஞர் – ஒரே கலைஞர் எம்.ஜி.ஆரே.
இன்றுவரை எந்த மொழிப் படங்களிலும் கௌரவ நடிகராக நடிக்காத ஒரே கதாநாயக நடிகர் எம்.ஜி.ஆரே.
இன்று வரையில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற வேட்பாளர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
நன்றி: சமநீதி எம்.ஜி.ஆர். மலர் – 1968