காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்.
பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள். சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள்.
அதனால்தான் மக்களின் ஆதரவை நாங்கள் விரும்புகிறோம். ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் வெறுப்புச் சூழலுக்கு எதிராக போராடும் முயற்சி.
கொரோனா காரணமாக பாத யாத்திரை செல்லக் கூடாது என பாஜக ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.
ஆனால் பிரதமர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மத்தியில் ஆளும் அரசு பொய்யர்களின் அரசாக உள்ளது” என குற்றம் சாட்டினார்.