புத்தாண்டு என்பது புத்துணர்வு கொடுக்க வேண்டிய ஒன்று. அதற்கான முன்னெடுப்புதான் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை சினிமா, இலக்கியம் புத்தகம் என தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது.
இந்த வருடமும் முழுநாள் பயிற்சிப்பட்டறை, இயக்குநர் மிஷ்கினுடன் புத்தாண்டு கொண்டாட்டம் என அடுத்த ஆண்டை வரவேற்க தயராவோம் என்று பதிவிட்டுள்ளார் தமிழ் ஸ்டுடியோ அருண்.
இயக்குநர் மிஷ்கின் 31 சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் 12 மணிவரை பேருரை ஆற்ற இருக்கிறார். பல வருடங்கள் இரவு 2 மணி வரை கூட பேசியிருக்கிறார். எனவே நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
இந்த நிகழ்விற்கு 100 பேர் வரை மட்டுமே அனுமதி. இன்னும் 40 பேர் வரை வரலாம். எப்போதும் இறுதி நாளில்தான் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் பதிவு செய்வார்கள்.
எனவே இந்தமுறை முதலில் வருவோருக்கு முன்னுரிமை. 31 அன்று காலை நடக்கும் தொழில்நுட்ப பயிற்சியில் கலந்துக்கொள்ளும் நண்பர்கள் இரவு மிஷ்கினுடனான புத்தாண்டு கொண்டாட்டத்திலும் கலந்துக்கொள்ளலாம்.
அதற்கான அனுமதி இலவசம். ஆனால் காலை நடக்கும் பயிற்சிக்கு சிறிய கட்டணம் உண்டு என்றும் அருண் தெரிவித்துள்ளார்.