நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்:
***

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக்கூலி தரும்.
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

(ஒன்றே…)

கடவுளிலே கருணை தனைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

(ஒன்றே…)

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

(ஒன்றே…)

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

(ஒன்றே…)

  • 1975-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். இசை – கே.வி.மகாதேவன். குரல் – ஜேசுதாஸ்.
You might also like