ஐ.சி.சி தரவரிசையில் இந்திய வீராங்கனை முன்னிலை!

மகளிர் டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 733 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தஹிலாவும் பெத் மூனியும் 766 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 6-வது இடத்திலும், ஜெமிமா 10-வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.

You might also like