கலைத்திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தயங்கமாட்டார்.
ஒரு சமயம் வெளியூருக்குச் சென்று நிதியுதவி செய்வதற்காக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.
இரவு பதினோரு மணியிருக்கும். வழியில் ஒரு கிராமத்தில் திருவிழா. தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது.
கார் மேலே போக முடியாதபடி ஒரே கூட்டம். கலைவாணர் காரை ஓரமாக நிறுத்தச் சொன்னார்.
தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் என்னையும் அழைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் உட்கார்ந்து கொண்டு ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.
கூத்து முடிந்ததும் மேடைக்கு அவர் ஏறியபோது எல்லோரும் ஆச்சர்யத்தில் ஸ்தம்பித்துப் போனார்கள்.
கூத்து ஆடியவர்களுக்கு நூறு ரூபாய் பரிசு கொடுத்துவிட்டு, மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்தோம்…
கலைவாணரைப் பற்றி என்.எஸ்.கே. மதுரம் அம்மா அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
- நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி