நினைவில் நிற்கும் வரிகள்:
*
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ வைப்போமே
வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன்
பழம் பறிப்போமே
(எங்களுக்கும்…)
உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல்
பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி
வாழ்ந்திருப்போமே
(எங்களுக்கும்…)
நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு பொய்யுமில்லை …
வஞ்சமில்லா வாழ்க்கையிலே
தோல்வியுமில்லை
(எங்களுக்கும்…)
– 1961-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளிவந்த ‘பாசமலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.