கனியாமூர் பள்ளியில் இன்று வகுப்புகள் தொடங்கியது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். 

இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர்.

இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

அதோடு டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்றும் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி இன்று முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கியது. 

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கனியாமூர் தனியார் பள்ளியின் 3வது தளம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

You might also like