– ஜெயலலிதா அன்று அளித்த பேட்டி
ஊர்சுற்றிக் குறிப்புகள்:
*
2013 ல் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா ஆங்கிலத்தில் அளித்த பேட்டியை தமிழ் சப்டைட்டில்களுடன் ஒளிபரப்பிய போது எழுதிய அன்றையப் பதிவு இது.
*
“ஜெயலலிதாவிடம் காணப்பட்ட நேர்காணலை தமிழாக்கத்தோடு ஒளிபரப்பினார்கள்.
தன்னுடைய இளமைக் கால வாழ்க்கையை, தந்தை இறந்தபிறகு சினிமா துணை நடிகையாக தாய் இருந்ததால், பள்ளியில் சகமாணவிகளிடம் சந்தித்த அவமானமான பேச்சுக்கள், தாயின் அரவணைப்பை இழந்த நிலைமை, பலவந்தமாகச் சினிமாவுக்குள் நுழைய வைக்கப்பட்ட சூழல் பற்றிச் சொன்னார்.
ஒரு கட்டத்தில் “நான் ஆண்களை வெறுக்கவில்லை. ஆனால் 18 வயதில் கல்யாணமாகிப் போயிருந்தால், நான் குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்திருப்பேன்.
ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. இப்போது எனக்காக வாழ்கிறேன். இப்போது கூட ஏதாவது ஒரு மலையில் சந்நியாசினியாகப் போக விரும்புகிறேன்” என்றார் சாந்தமாக.
தன்னைப் பற்றிச் சொல்கிறபோது “என் மனதில் உள்ளவற்றை நான் வெளிப்படையாக காண்பித்துக் கொள்ள மாட்டேன். அந்த அளவுக்கு எனக்குச் சுயக்கட்டுப்பாடு உண்டு.
என் அளவுக்கு யாரும் அரசியலில் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை” என்றவர் அவருடைய தோழியான சசிகலாவை, சகோதரியாக, தாயாராக, தனக்கு அறிவுரை சொல்கிறவராகப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டு நிறைவாகச் சொன்னார்.
“அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது”