இலக்கு அடையும்வரை துன்பங்களை பொறுத்துக் கொள்!

– புரட்சியாளர் அம்பேத்கர்

நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்!

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!

எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்!

மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை!

உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.

சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள். குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.

ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால் அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும் பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்!

கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது!

இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்!

You might also like