உண்மையைச் சொல்வது சிரமம்!

இன்றைய வாசிப்பு:

“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது.

ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

உலகத்தைப் பற்றி ஃபேஸ்புக், டுவிட்டர் மூலமாகத் தெரிந்து கொள்கிறார்கள். தாங்கள் கேட்க விரும்பும், தங்களுக்குப் பிடித்தமான தகவல்களை மட்டுமே மக்கள் அறிந்து கொள்கிறார்கள்.

நம்பத் தகுந்த உண்மைகளையோ, அவர்கள் கேட்க விரும்பாத உண்மைகளையோ அறிந்து கொள்வதில்லை. இதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் தற்போதைய விவாதப் பொருள்.

இன்றைய உலகில் உண்மையைச் சொல்வதென்பது மேலும் மேலும் சிரமமாகி வருகிறது”.

– ஓரான் பாமுக், நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர்.

நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்.

You might also like