குறைப் பிரசவம் என்பது குறைபாடா?

கருவில் உள்ள சிசு 40 வாரங்கள் முழுமையான வளர்ச்சியை அடைந்த பின்பே குழந்தையாக உருவம் பெற்று மண்ணிற்கு வருகிறது. ஆனால் இந்த 40 வாரங்கள் முழுமையடைவதற்கு முன்பே நிகழும் பிறப்புதான் குறைப்பிரசவம் என்று சொல்லப்படுகிறது.

கர்ப்பிணிகளின் அதிகபட்ச ஆசை குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் முதல் மாதம் தொடங்கி 9 மாதங்கள் வரை பார்த்து பார்த்து பக்குவமாக ஒவ்வொன்றையும் செய்வார்கள்.

எடுத்து அடி வைப்பதில் கூட கவனம் இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இது அத்தனைக்கும் காரணம் குழந்தை 9 மாதம் முழுமையான வளர்ச்சி பெற்று ஆரோக்கியமான முறையில் பிறக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதையும் மீறி சில நேரங்களில் தவறுகள் நடக்கின்றன.

அப்படி கர்ப்பகால சிக்கல்களில் எதிர்பாராமல் நடப்பது குறைப்பிரசவம். இது ஏன் நிகழ்கிறது. அறிகுறிகள் என்ன. தவிர்க்கும் வழிகள் என்ன.

குறைப்பிரசவம் என்றால் என்ன..?

கரு 40 வாரங்களை கடக்காமல் 37-வது வாரம் அல்லது அதற்கு முன்பு என எப்போது நிகழ்ந்தாலும் அது குறைப்பிரசவமாகவே கருதப்படுகிறது.

ஏனெனில் 37 வாரத்திற்குப் பின்பு அதாவது இறுதி வாரங்களில்தான் குழந்தையின் எடை அதிகரித்தல், மூளை வளர்ச்சி, நுரையீரல் போன்ற உறுப்புகள் முழுமையான வளர்ச்சியை பெறுகின்றன.

எனவேதான் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் சில உடல் நல பாதிப்புகளை சந்திக்கின்றன.

வர்களுக்கு அதிக மருத்துவ கண்கானிப்பும் தேவைப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் கற்றல் குறைபாடு, உடல் குறைபாடு அல்லது நீண்ட கால உடல் நலப் பிரச்சனைகளையும் சந்திக்க நேரலாம்.

குறைப்பிரசவ அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

குறைப்பிரசவம் நடக்கும் வாய்ப்புகள் இருந்தால் இதை மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்துவிடுவார்கள். இதற்கான சில ஓய்வு , மருந்து மாத்திரைகளையும் பரிந்துரைப்பார்கள்.

அப்படி ஆரம்ப காலத்தில் என்னென்ன அறிகுறிகளை உணர்வீர்கள் என்று பார்க்கலாம். சிலருக்கு இதைவிட அதிகமான அறிகுறிகளும் இருக்கலாம்.

வயிறு சிறிய அளவில் இருத்தல்
தலை மட்டும் பெரியதாக இருத்தல்
கரு வளர்ச்சி கூர்மையாக இருத்தல்
குழந்தையின் உடலில் கொழுப்பு குறைவாக இருத்தல்
குறைந்த உடல் வெப்பநிலை
மூச்சுத்திணறல்
உணவு சரியான முறையில் செல்லாதது
அனிச்சை செயலால் விழுங்க முடியாத நிலை
குழந்தை எடை குறைவது
உடல் நீளம் மற்றும் தலை சுற்றளவில் மாற்றம்
போன்ற அறிகுறிகளை முன் கூட்டியே நீங்கள் ஸ்கேன் வழியாகவும், சில அறிகுறிகள் வழியாகவும் உணர முடியும்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு உண்டாகும் எதிர்கால சிக்கல்கள் :

மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கும்
எடை குறைவாக இருக்கும்
உடலில் கொழுப்பு குறைவாக இருக்கும்
உடல் வெப்பநிலையில் சமச்சீரின்மை
அடிக்கடி சோர்வு, ஆக்டிவாக இல்லாதது,
உணவு சாப்பிடுவதில் சிரமம், உணவு அலர்ஜி,
சருமத்தில் மஞ்சள் அல்லது வெளிறிய நிற மாற்றம்
போன்றவை இருக்கலாம்.

மருத்துவ ரீதியாகவும் சில சிக்கல்களை அனுபவிக்கலாம். அவை..

நுரையீரல் அல்லது மூளையில் இரத்தக்கசிவு, இரத்த சர்க்கரை அளவில் மாற்றம், பாக்டீரியா இரத்த தொற்று, நிமோனியா, தொற்று மற்றும் வீக்கம், இரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருத்தல், மூச்சுத்திணறல் நோய்குறி, சுவாசக்கோளாறு போன்றவை ஏற்படலாம்.

குறைப்பிரசவம் உண்டாக காரணங்கள் :

ஒரு குழந்தைக்கு மேல் கரு உருவாதல்
செயற்கை முறையில் கருத்தரிப்பு (அரிதானது )
இரத்த சோகை, சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் அதிகரித்தல்
கர்ப்பப்பை கோளாறு,
கர்ப்பப்பை வாய் பகுதியில் பிரச்சனை
பிரசவ காலத்திற்கு முன்பே பனிக்குடம் உடைதல்
கர்ப்பகால உதிரப்போக்கு அதிகரித்தல்,
புகைப்பிடித்தல், சுயமாக மாத்திரைகளை உட்கொள்ளுதல்
அதிக உடற்பயிற்சி
சிகிச்சைகளை அலட்சியம் செய்தல்

போன்றவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஆனால் இதுதான் முழுமையான காரணங்கள் என துல்லியமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் இந்த காரணங்கள் வேறுபடலாம்.

குறைப்பிரசவத்தை தடுக்க முடியுமா..?

ஆரம்ப காலத்திலிருந்தே சில விஷயங்களை முறையாக பின்பற்றி வந்தால் குறைப்பிரசவத்தை தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அதாவது, கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுதல்,

முழு தானியங்கல், புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ளுதல்,
ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் சத்து தவறாமல் உட்கொள்ள வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம்.

அதிக தண்ணீர் குடித்தல், நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்த்தல் அவசியம்.
மருத்துவரை தவறாமல் ஒவ்வொரு மாதமும் பார்த்தல் அவரின் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றுதல்
புகைப்பிடித்தல், மது போன்ற பழக்கங்கள் இருப்பின் அவற்றை தவிர்த்தல்.

பிரசவத்திற்கு முன்பு பலரும் செய்ய மறந்து போகும் 5 முக்கியமான வேலைகள்.!

இன்றைய தொழில்நுட்ப சூழலில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிர் வாழும் விகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளும், தரவுகளும் கூறுகின்றன.

இது பற்றி வெளியான ஆய்விலும் 28 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகளின் உயிர் வாழும் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

1993-ம் ஆண்டில் 70 சதவீதமாக இருந்த சாத்தியங்கள் இப்போது 79 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

எனவே குழந்தையை ஆரோக்கியமான முறையில் பெற்றெடுக்கவே பெரும்பாலும் முயற்சி செய்கிறோம்.

அதையும் மீறி சில விஷயங்கள் நடந்தாலும் அதை தைரியத்துடன் எதிர்கொள்ளும் துணிவு கருவை சுமக்கும் தாய்க்கு இருக்க வேண்டும்.

– நன்றி: நியூஸ் 18

You might also like