வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்!

– குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அறிவுறுத்தல்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், “குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிக அழகான கட்டம். அதுவே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன.

சிறந்த முறையில் குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுத்துவது மிக முக்கியமானது. நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து குழந்தைகள் கனவு  காண வேண்டும். இன்றைய கனவுகள் நாளைய நனவாக மாறும் என்றும் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் கடமையை செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

You might also like