ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களை காக்கிநாடா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக எல்லை தாண்டியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும்,
மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை மூலமாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காக்கிநாடா காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ மீன்களை கடற்படை காவல்துறையினர் ஏலத்தில் விட்டனர்.