பருவம் மாறுவதால் ஒவ்வாமை அல்லது காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், இருமல், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிற அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவற்றை முற்றிலுமாகத் தடுப்பதற்கு ஆறு வகையான உணவுகள் உதவுகின்றன.
சிட்ரஸ் வகை பழங்களில் உள்ள வைட்டமின் சி, வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது. ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
மேலும் மழைக் காலங்களில் இவை விலை மலிவாகவும் கிடைக்கும் நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தைவிட இருபது மடங்கு வைட்டமின் சி சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்னாசிப் பழத்தில் ப்ரோமைலின் (Bromelain) என்கிற நொதி காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது மழைக்கால ஒவ்வாமைகளின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. ப்ரோமைலின் சுவாசப் பாதைத் தொற்று மற்றும் ஆஸ்துமா தாக்கத்தை குறைக்கிறது. அன்னாசிப்பழம் அப்படியேவும் சாப்பிடலாம்… ஸ்மூத்திகளில் (soomthie) அன்னாசியை சேர்த்துக் குடிக்கலாம்.
வெங்காயம் அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை உள்ளிட்டவை குணமாகும்.
கொழுப்பு நிறைந்த மீன் வகைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (omega 3 fatty acids) மழைக்கால ஒவ்வாமையைக் குறைக்கப் பயன்படுகிறது. சால்மன், டுனா, கானாங்கெளுத்தி, மத்தி உள்ளிட்ட மீன் வகைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் சிறந்தவை.
ஆப்பிளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. ஒருநாளைக்கு உடலுக்குத் தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளடங்கி இருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பொருள் மஞ்சள். இது சளி மற்றும் பலவித உடல்நலப் பிரச்னைகளுக்கு கைவைத்திய மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் கெட்ட பாக்டீரியா, வைரஸ் தொற்று தடுப்பு, ஆன்ட்டிமுட்டஜெனிக் (antimutagenic) தடுப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளுக்குப் பெயர்போனது மஞ்சள். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பைத் தருகிறது.
– நன்றி தினமலர்