இயற்பியல் கண்டுபிடிப்புக்காக 1903-ம் ஆண்டிலும் வேதியியல் கண்டுபிடிப்புக்காக 1911-ம் ஆண்டிலும் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் மேரி கியூரி அம்மையார்.
இவரது கணவர் பியரி கியூரி (Pierre Curie) 1903 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தனது மனைவி மேரி கியூரியுடன் பகிர்ந்து கொண்டார்.
மேரி கியூரியின் மகள் ஐரீன் ஜோயோலியட்-கியூரி (Irène Joliot-Curie) செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை கண்டுபிடித்ததற்காக அவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்டுடன் (Frédéric Joliot) இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
ஒரே குடும்பத்திலிருந்து ஐந்து நோபல் பரிசுகளை வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கே உரித்தானது.
ஐரீன் இயோலியட் கியூரியின் மக்கள் ஹெலனும் பியரியும்கூட சிறப்புமிக்க விஞ்ஞானிகள் ஆவர்.