நடிகர் முரளியின் மகனான அதர்வா பெரிய வெற்றிகளை பெறுவதற்கு முன்பே தலைகால் புரியாமல் ஆடுவதாக தமிழ் சினிமா வட்டாரம் பேசுகிறது.
சமீபகாலமாக படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற புகாரும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்துவருகிறது.
தற்போது வீடு தேடி வந்த அதிர்ஷ்டம்போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் அதர்வாதான் ஹீரோ என்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். எந்த இளம் நடிகருக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தெரியாதவராக இருக்கிறார் அதர்வா என்று சொல்கிறார்கள்.
சம்பளம் முன்னே பின்னே இருந்தாலும், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. ஆனால், அதர்வாவோ கோடிகளில் சம்பளம் வேண்டும் என்கிறாராம்.
போகிறபோக்கைப் பார்த்தால் அதிர்ஷம் வலுக்கட்டாயமாக வீட்டுக் கதவைத் தட்டினாலும், அதர்வா திறக்கமாட்டார் போலிருக்கிறது.