ரஷியாவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு!

ரஷியா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

இதையடுத்து, உக்ரைனில் உள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் கடந்த 10-ஆம் தேதி அறிவுறுத்தல் வெளியிட்டது.

அதன் பிறகும் தலைநகா் கீவ் உள்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷியா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதோடு, பல பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளது.

உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியா்கள் கிடைத்த வாகனங்கள் மூலமாக உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சில இந்தியர்கள் உக்ரைனைவிட்டு வெளியேறினர்.

மீதமுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். உதவி தேவைப்படுபவர்கள் அருகிலுள்ள தூதரகத்தை உடனடியாக அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.

You might also like