எது என் சுதந்திரம்? – சுந்தர ராமசாமி!

“நான் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன.

அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள்.
நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இதற்கு மேற்பட்ட எந்தத் தகுதிகளையும் நான் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. புலவர் என்றோ, அறிவாளி என்றோ, சிந்தனையாளர் என்றோ, ஒருவர் என்னை அழைத்தால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அழைப்பது அவர் சுதந்திரம். ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது என் சுதந்திரம்”

– ‘என் படிப்பனுபவமும், படைப்பனுபவமும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.

You might also like