சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படம்!

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் புதிய படத்தில் நடிக்கிறார்.

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னதாக கேசினோ எனும் படத்தில் நடித்துள்ள ரங்கராஜ், தற்போது யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார்.

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. தற்போது நல்ல ஒரு காதல் கதையை அவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. வரும் டிசம்பரில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும்.

You might also like