அறியாமையை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு!

– கன்பூசியஸ் சிந்தனைகள்

பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது.

பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன்.

மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.

மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்புவதை வைத்திருப்பதில் இல்லை, ஆனால் நீங்கள் வைத்திருப்பதை விரும்புவதில் உள்ளது.

மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் கவலைப்படாதீர்கள். மாறாக உங்களால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கவலைப்படுங்கள்.

கேள்வி கேட்கும் மனிதன் ஒரு நிமிடம் முட்டாள், கேள்வி கேட்காத மனிதன் வாழ்க்கை முழுமைக்கும் முட்டாள்.

இருளைச் சபிக்காதீர்கள், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள்.

நோக்கம் இல்லாமல் தொடர்வதை விட, தொடராமல் இருப்பதே நல்லது. நீங்கள் ஒரு தவறு செய்து அதைச் சரிசெய்யவில்லை என்றால், அது தவறு என்று அழைக்கப்படுகிறது.

கருணையுடன் செயல்படுங்கள், ஆனால் நன்றியை எதிர்பார்க்காதீர்கள்.

மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்.

தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான்.

நல்லொழுக்கமுள்ள மனிதன் பொறுப்பால் இயக்கப்படுகிறான், நல்லொழுக்கமற்றவன் இலாபத்தால் இயக்கப்படுகிறான்.

உங்களிடமிருந்து அதிகம் எதிர்பாருங்கள், மற்றவர்களிடமிருந்து குறைவாக எதிர்பாருங்கள், நீங்கள் மனக்கசப்புகளைத் தவிர்ப்பீர்கள்.

பிரச்சினையை விவரிக்க முடியாதவர், ஒருபோதும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாட்டார்.

உங்கள் கடந்த காலம், உங்கள் விதியைத் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்.

உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள்.

நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.

நீங்கள் இரண்டு முயல்களைத் துரத்தினால், நீங்கள் எதையும் பிடிக்கமாட்டீர்கள்.

ஒரு புத்திசாலி இசையால் தன் ஆத்மாவை வலுப்படுத்த முயல்கிறான், சிந்தனையற்றவன் தன் அச்சத்தைத் தணிக்க அதைப் பயன்படுத்துகிறான்.

ஒரு ஆழமான காட்டில் உள்ள ஒரு ஓர்க்கிட் யாரும் பாராட்டவில்லை என்றாலும் அதன் நறுமணத்தைப் பரப்புகிறது.

ரோஜாக்களைக் கொடுக்கும் கையில் எப்பொழுதும் கொஞ்சம் நறுமணம் ஒட்டிக்கொண்டிருக்கும். நீங்கள் பெருந்தன்மையுடன் இருந்தால், நீங்கள் அனைத்தையும் அடைவீர்கள்.

நீங்கள் விரும்பும் ஒரு வேலையைத் தேர்வுசெய்யுங்கள், பிறகு உங்கள் வாழ்வில் ஒருநாள் கூட நீங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை.

தனது குறியைத் தவறவிட்ட வில்லாளன் இலக்கைக் குறை கூற மாட்டான். அவன் நிறுத்தி, தன்னைத்தானே திருத்திக்கொண்டு மீண்டும் எய்கிறான்.

அனைத்திலும் அழகு உள்ளது, ஆனால் எல்லோரும் அதைப் பார்ப்பதில்லை.

உங்களை நீங்களே மதியுங்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள்.

ஒருவரின் அறியாமையின் அளவை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு.

தன்னால் முடியும் என்று சொல்பவனும், தன்னால் முடியாது என்று சொல்பவனும், இருவரும் சரியானவர்களே.

ஒரு நேர்மையற்ற சமூகத்தில் செல்வந்தராகவும் மரியாதைக்குரியவமாகவும் இருப்பது ஒரு அவமானமாகும்.

ஆயிரம் சொற்களை விட ஒரு படம் சிறந்தது.

ஒரு உயர்ந்த மனிதர் பேசுவதற்கு முன்பே செயல்படுகிறார், பின்னர் அவரது செயலுக்கு ஏற்ப பேசுகிறார்.

தனது வேலையைச் சிறப்பாகச் செய்ய விரும்பும் வேலைக்காரன், முதலில் அவனுடைய கருவிகளைத் தயார்செய்ய வேண்டும்.

முயற்சிப்பதை நிறுத்தாத வரை நீங்கள் எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.

– தொகுப்பு: ஜுபேதா காதர்

You might also like