அருமை நிழல்:
‘எங்க வீட்டுப் பிள்ளை’ – பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அதில் வரும் ஒரு காட்சியில் ஹோட்டல் ஒன்றில் இரண்டு எம்.ஜி.ஆர்-களும் அடுத்தடுத்துச் சாப்பிடும் காட்சி தனக்குப் பிடித்த ஒன்றாகச் சொல்லியிருப்பார் எம்.ஜி.ஆர்.
1965 ஆம் ஆண்டு பொங்கல் சமயத்தில் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் சாணக்கியா. படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
வெள்ளிவிழா கண்டு பெரும் வெற்றியடைந்த அந்தப் படத்திற்பான படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆருக்கு மாலை கொடுத்துக் கௌரவிக்கிறார் படத் தயாரிப்பாளரான நாகிரெட்டி.
படம் உதவி: ஞானம்