முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு!

-சிக்மண்ட் பிராய்டின் உளவியல் கூறுகள்

வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ அல்லது ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும்.

உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும்.

ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.

எப்படிச் செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி எந்த நேரமும் நினைத்துக் கொண்டிரு.

கனவு காண், அந்த கனவே உன்னைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

தன் குழந்தைக்கு பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.

ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான்.

மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும்

அதிகமாக பெறுவதற்கு கண்டிப்பாக நாம் அதிகமாக கொடுக்கவும் வேண்டும்

You might also like