ஜனநாயக வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு!

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஊடகத்துறை சார்பில் மாணவிகளுக்கான சிறப்புப் பயிலரங்கமாக நடைபெற்ற சொற்பொழிவில் வழக்கறிஞரும், கதை சொல்லி இதழின் ஆசிரியரும், திமுக செய்தித் தொடர்பாளருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அச்சு இயந்திரத்தின் தோற்றம் தொடங்கி, செய்திப் பரிமாற்றத்தின் துவக்க காலம், உலகம் முழுவதும் செய்திகள் எப்படிப் பரவின என்பது குறித்த வரலாறு, இதழ்களின் வளர்ச்சி, ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான தொடர்பு, அவருக்கும் இந்திராகாந்தி, கலைஞர், எம்.ஜி.ஆர், பிரபாகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்குமான தொடர்பு, அரசியல் மாற்றங்களுக்கு ஊடகங்களின் பங்களிப்பு, ஜனநாயக வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு என அவரது பேச்சு நீண்டது.

சொற்பொழிவுக்குப் பின்னர் மாணவிகளுடனான கலந்துரையாடலும், கேள்வி – பதில் உரையாடலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், பத்திரிகையாளர் மணா, கல்லூரி முதல்வர் முனைவர். மணிமேகலை, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அபிதா சபாபதி, ஊடகத்துறைத் தலைவர் பவித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You might also like