செய்தி : “2026-க்குள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.” – ஆய்வில் வெளிவந்த தகவல்.
கோவிந்து கேள்வி: 2026-க்குள் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்னு சொல்லியிருக்கீங்க… இதுக்கு கொஞ்சம் பேர் சந்தோஷம்கூட படலாம். ஆனால், அதேசமயம் 2026-க்குள் தற்போது மிகமிக மோசமாகிவரும் பொருளாதார நிலையில் எவ்வளவு பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே போய் ஓட்டாண்டியாகி விடுவார்கள் என்கிற எண்ணிக்கையும் சேர்த்து சொல்லலாமே?