ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

டெர்பியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.

இதனால் முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில் இருந்த மந்தனா, மெக் லேனிங்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-வது இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

அதேபோல ஒருநாள் தரவரிசையில் 7-ம் இடத்துக்கு மந்தனா முன்னேறியுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தார். இதனால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் 9-வது இடத்தில் உள்ளார்.

You might also like