தேர்தல் ஆணையம் அதிரடி
நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் களமிறங்கின.
இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி, அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்சிகளை பதிவுசெய்தும், அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் செயல்படாமல் இருந்த 7 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
கொங்குநாடு ஜனநாயகக் கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.