பெரியாருக்கு வ.உ.சி எழுதிய கடிதம்!

வ.உ.சிக்கு இது 151 ஆவது ஆண்டு.

‘தியாகச் செம்மல்’ என்று போற்றப்படுகிற வ.உ.சிதம்பரம் சொந்தமாகக் கப்பலையே வைத்திருந்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் செக்கு இழுப்பது உட்படப் பல்வேறு நெருக்கடிகளுக்கு அவரை இட்டுச்சென்றது பலருக்கும் தெரியும்.

சிறையிலும், சிறையிலிருந்து மீண்ட பிறகும் அவர் பட்ட சிரமங்கள் பலதரப்பட்டவை. பொருளாதார ரீதியிலும் அவர் சிரமங்களைச் சந்திக்க நேரிட்டது.

அதற்கான ஆவணங்களில் ஒன்று ஈரோட்டில் உள்ள பெரியாரின் நினைவில்லத்தில் இன்றைக்கும் உள்ள ஒரு கடிதம்.

அந்தக் கடிதத்தை எழுதியவர் வ.உ.சிதம்பரம்.

கடிதம் எழுதப்பட்ட தேதி 1928, ஜூன் மாதம் 16 ஆம் தேதி.

“என் மகன் ஸ்கூல் பைனல் எக்ஸாமினேஷன் தேறிவிட்டான்.
இனிமேல் என்னால் அவனைப் படிக்க வைக்க முடியாது. போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு அவனை அனுப்பலாம் என்று நினைக்கிறேன்.

தகுதியான சிபாரிசு இருந்தால் முதலிலேயே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகலாம். சாதாரண சிபாரிசு இருந்தால் முதலில் சப் இன்ஸ்பெக்டர் ஆகலாம்.

தகுதியான சிபாரிசு நமக்குக் கிடைக்குமா என்பதைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்.

கடவுள் துணை!

அன்புள்ள
வ.உ.சிதம்பரம்.

You might also like