ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக அரசு!

கா்நாடக மாநிலம், உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது.

இதனால் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசிய தேவையானதல்ல என்று கூறியதுடன் ஹிஜாப் அணியத் தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறியது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுவில், “மதச் சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்றும், ஹிஜாப் அணிவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமையாகும் என்றும் இதை கா்நாடக உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

You might also like