நண்டு கற்றுக் கொடுத்த பாடம்!

கண்ணதாசனின் நம்பிக்கைக் கதிர்கள்:

“ஓர் அலை மூலம் மிகப்பெரிய நண்டு ஒன்று கரையில் வந்து விழுந்தது. பயந்து அவன் எழுந்து நின்றுவிட்டான். நண்டு கரையிலேயே ஓடும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அது மீண்டும் கடலுக்குள்ளேயே ஓடிற்று. கடல் அதை ஏற்றுக் கொண்டது.

அவனுக்கு ஒரு நம்பிக்கை தோன்றியது. சமுதாயம் நம்மை வெளியில் தூக்கி எறிந்தாலும் நாம் மீண்டும் சமுதாயத்திற்குள்ளேயே ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும்.

அலை நண்டை வெளியே தள்ளியது, வெறுப்பினால் அல்ல. நண்டு சரியாக ஊன்றிக் கொள்ளாததனாலேதான், வெளியே வந்து விழுந்தது.

சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் காலூன்றி நிற்பது, நின்று விடுவது என முடிவு கட்டிக் கொண்டேன்.” – என்று எழுதியுள்ள கவிஞர் கண்ணதாசன்.

நண்டிடம் பாடம் கற்றுக் கொண்டால்தான் நண்டை வைத்தே ஒரு கவிதையைப் பிற்காலத்தில் எழுதியுள்ளார் கவிஞர்.

“நம்மால் முடியுமா என்று நீ எண்ணினால்
நண்டுகூடச் சிரிக்கும்
நாளை விடியுமா என்று நீ வாடினால்
நாயகன்தான் சிரிப்பான்”

– நன்றி: புதுகைத் தென்றல் வார இதழ்.

You might also like