ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரித்த சந்திரலேகா திரைப்படம் 9 ஏப்ரல், 1948 அன்று வெளிவந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தென்னிந்திய படங்களுக்கு வட இந்திய வாசலை திறந்துவிட்டவர் எஸ்.எஸ்.வாசன்!
தென்னிந்திய மொழிப்படத் தயாரிப்புகள் பரவலான ஒரு வியாபார வட்டத்தைப் பெற்றிருக்காத காலம் அது. குறிப்பாக, தமிழ்த் திரைப்படங்கள் வட இந்திய உலகில் தீண்டத்தகாதவையாகக் கருதப்பட்ட கால கட்டம்!
அப்படிப்பட்ட ஒரு சூழலில், தமிழில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வட இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தின் கதவுகளையே தட்டித் திரும்பிப் பார்க்க வைத்தது
அந்தப் படத்தின் பிரமாண்டமும் தொழில்நுட்ப விஷயங்களும் ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்தன.
படத்தின் காட்சியமைப்புகளும், பிரமாண்டமான செட்டுகளும் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பிரமிப்பில் ஆழ்த்தின. இம்மாதிரி மீண்டும் ஒரு படம் வெளிவருமா என எல்லா தரப்பினரிடையேயும் பட்டிமன்றமே நடந்தது அந்நாளில்!
ஒரே நாள் இரவில், ஒரு தமிழரின் பெயரை வட இந்தியா தன் திரைப்பட வரலாற்றில் குறித்துக்கொண்டது. திரையுலகம் அவர் பெயரைப் பொன்னேட்டில் பொறித்துக்கொண்டது.
அந்தத் திரைப்படம்தான் – சந்திரலேகா
– நன்றி முகநூல் பதிவு