பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நடிக்கும் புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார். ஸ்ரீனிவாஸ் விட்டலா படத்தை இயக்குகிறார்.
ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குநர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார்.
விழாவில் பேசிய இயக்குநர் ஸ்ரீனிவாஸ் விட்டலா, “கதையை முடித்த பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தைத் தேடும் முயற்சியில் இருந்தோம், அந்த நேரத்தில் ஜானி மாஸ்டருடன் பழகினேன்.
இருபதே நிமிடங்களில் நான் சொன்ன கதையின் மையப் புள்ளி மிகவும் பிடித்துப் போக, எங்கள் ஸ்கிரிப்டை அவர் ஓகே செய்தார்.
எங்கள் படம் வணிக பொழுதுபோக்கு & சமூக செய்திகள் நிறைந்த அரசியல் டிராமாவாக இருக்கும். படப்பிடிப்பை செப்டம்பர் 15ல் துவங்கி மூன்று கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இயக்குநர் ஜானி மாஸ்டர் பேசும்போது, “மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளில் எங்கள் படத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீனிவாஸ் விட்டலா சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நடனம் மற்றும் விளம்பரங்களுக்கு மேலாக என் அடையாளத்தை வளர்க்க இதுபோன்ற ஒரு நல்ல கதையுடன் அடுத்த கட்டத்திற்கு வர முடிவெடுத்துள்ளேன்.
தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தைக் கொண்டு வருகிறோம்” என்றார்.
சினிமா பண்டி புகழ் விகாஸ் பேசும்போது, “ஜானி மாஸ்டருடன் இணைந்து பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது போதுமான கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய நல்ல அரசியல் டிராமாவாக இருக்கும்.
இது நகைச்சுவை, நையாண்டிகள், சமூக செய்திகள் என பலவற்றை உள்ளடக்கிய ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார் நம்பிக்கையாக.