என்று தொலையும் ஆன்லைன் ரம்மி மோகம்?

தொலைக்காட்சித் தொடர்களை செல்போன் வழியே பார்க்கிறீர்கள் என்றால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான விளம்பரங்களைத் தவிர்க்கவே முடியாது.

அந்த அளவுக்கு பிரபல நடிகர்கள் வந்து ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தூண்டுதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏறத்தாழ 80 பேருக்கு மேல் ஆன்லைன்  ரம்மி விளையாட்டில் தோற்றுப் போய் உயிரை விட்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் ஆன்லைன் ரம்மியை இதுவரை நிறுத்த முடியவில்லை.

ஆய்வு செய்தார்கள். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பிறகும் தொடர்ந்து மக்களிடம் கருத்துக் கேட்பதாகச் சொன்னார்கள். அதிகாரிகளுடன் ஆலோசனை நடப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தடைவிதிக்கச் சொல்லி வந்தும் கூட இதுவரை அரசு தரப்பிலிருந்து தடை விதிப்பது குறித்து எந்த அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை.

ஏனிந்தத் தாமதம்? ஏன் உரிய நடவடிக்கை எடுப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்? இதுவரை உயிரிழந்த உயிர்களின் எண்ணிக்கை போதாதா தேவையான முடிவெடுக்க?

ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பங்கள் தங்களுக்கு வரும் வரை எத்தனை ஊடகங்கள் அதைத் தடுப்பது குறித்தெல்லாம் பேசப் போகின்றன?

மக்களைப் போதையாக்குகிற ஒன்றைத் தடுப்பதற்குக் கூடவா இவ்வளவு யோசிக்க வேண்டும்?

அந்த அளவுக்கு ஆன் லைன்  ரம்மி லாபி வலுவாக இருக்கிறதா என்கிற கேள்வி எழாத அளவுக்கு செயல்பட்டாக வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

– யூகி

*

You might also like