சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில், அதிலிருந்த இரண்டு விமானிகள், விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு தூங்கியுள்ளனர்.
விமானம் விமான நிலையத்தை அணுகியபோது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் தரையிறங்குவதற்கான சிக்னல்களை அனுப்பியுள்ளனர். ஆனால், விமானம் தரையிறங்கத் தொடங்கவில்லை.
கட்டுப்பாடு அதிகாரிகள் பலமுறை விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றும் அவர்களால் விமானிகளை எழுப்ப இயலவில்லை.
விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுபாதையைத் தாண்டிச் சென்றபோது, தன்னியக்க பைலட் துண்டிக்கப்பட்டு அலாரம் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
இந்த சத்தத்தை கேட்ட பின்னர் விமானிகள் தூக்கத்தில் இருந்து விழித்துள்ளனர். பின்னர் 25 நிமிடங்களுக்குப் பிறகு ஓடுபாதையில் விமானத்தை முறையாக தரையிறக்கியுள்ளனர்.
நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.