ஓங்கி வளரட்டும் மத நல்லிணக்கம்!

“எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான்.

மதங்கள் என்பது ஒரே உள்ளங்கையை நோக்கி நீளும் விரல்கள் போன்றவை. அதை ஒரே உண்மையை நோக்கி அழைத்து செல்லும் வெவ்வேறு விரல்கள்” – என்றார் கலீல் ஜிப்ரான்.

அதேபோல நம்மை மேன்மைப்படுத்துவதற்காகவே மதங்கள். அவை நாம் எப்படி வாழவேண்டும்? என்பதை நெறிப்படுத்தி நேர்மையுடன் திகழ வழிகாட்டுகின்றன.

அவை வழிபாடுகளால் வேறுபட்டாலும், அன்பு என்கின்ற ஒற்றை புள்ளியில் இணைந்தால்தான் மானுடம் செழிக்கும், மனிதம் தழைக்கும்.

பண்டைய காலத்திலும் மத ஒற்றுமை இருந்து இருக்கிறது. முகலாய மன்னர் ஸ்ரீரங்கம் கோவிலை சூறையாடி உற்சவரான நம்பெருமாள் சிலையை எடுத்துச் சென்ற நேரத்தில், அவரது மகள் பீவி நாச்சியார் அந்த சிலையை பத்திரமாக வைத்திருந்து ஸ்ரீரங்கம் கோவிலின் பக்தர்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டு மரணமடைந்துவிட்டார்.

அவரை இன்னமும் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ஜூனன் மண்டபம் வடகிழக்கு மூலையில் ஒரு சன்னதி அமைத்து வழிபடுகிறார்கள். தினமும் ரொட்டியும், வெண்ணையும் படைக்கப்படுகிறது.

ஆக இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பீவி நாச்சியார் என்ற அந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர். மொத்தத்தில் கோவில்கள் மத நல்லிணக்கத்தை பின்பற்ற கூறுகிறது.

இதேபோல, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல சம்பவங்கள் எல்லா மதங்களிலும் நடக்க வேண்டும். எல்லா மதமும் சமமானது.

என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான்.

மனிதநேயம்தான் எல்லாவற்றுக்கும் மேலானது. எல்லா மதத்தினரும் ஒரு தாய் பெற்ற மக்களே என்ற உணர்வு ஆழமாக பதிய எல்லா மத தலைவர்களும் முனைப்புடன் செயல்பட்டால், எந்த பிரிவினையும் மத அடிப்படையில் நமக்குள் வராது. ஓங்கி வளரட்டும் மத நல்லிணக்கம்.

– நன்றி: தினத்தந்தி

You might also like