7000 மரங்களை நட்ட இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த்.

பி.சி.ஏ பட்டதாரியான இவர், சென்னையில் சினிமா இயக்குனராகும் கனவுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே 2017-ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக ஸ்ரீகாந்த் சொந்த ஊருக்கு திரும்பினார்.

அங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் இருந்த வனப்பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டிருந்ததைக் கண்ட ஸ்ரீகாந்த், அதை மீண்டும் உருவாக்கும் கனவோடு முதலில் சாலை ஓரங்களில் மரங்களை  நட ஆரம்பித்துள்ளார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 7000 மரக்கன்றுகளை நட்டு, குருங்காடு வளர்த்து வருகிறார்.

இந்தச் செயலை பாராட்டும் விதமாக அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த இளைஞருக்கான விருதை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீகாந்துக்கு வழங்கினர். அதோடு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி முதல்வர் கௌரவித்தார்.

ஊக்கத்தொகை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், தொடர்ந்து பல்லாயிரம் மரங்களை வளர்ப்பதே தனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

You might also like